முன் விரோத தகராறு மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார்
ஜம்புலிப்புத்தூரைச் சேர்ந்த செந்தில்நாதன் இதே ஊரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு காரணமாக மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிப்புத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் 44, இதே ஊரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் இவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் செந்தில்நாதன் ஆண்டிபட்டி வைகை ரோட்டில் இருந்த போது நந்தகுமார் அவருடன் இருந்த கண்ணன் மற்றும் பெயர் தெரியாத மற்றொருவர் மூவரும் சேர்ந்து செந்தில்நாதனை தாக்கியதில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். செந்தில்நாதன் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் 3 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்