திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குருமலை பகுதியை சேர்ந்த பச்சையன் என்பவர் சாகுபடி பணிக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார் அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் சிகிச்சைக்காக அவரை தொட்டில் கட்டி உடுமலை அரசு மருத்துவமனைக்கு அடர்ந்த வனப்பகுதியில் வழியாக கொண்டு வந்தனர் கடந்த மூன்று தினங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதை வசதி இல்லாமல் தொட்டில் கட்டி தூக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது