புதுக்கோட்டையில் ரூ.3.35 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம்; புதிய கட்டிடதுக்கு பூமி பூஜை!!
புதுக்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் புதிய கட்டிடம் ரூபாய் 3.35 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை தொடங்கப்பட்டது.;
By : King 24x7 Desk
Update: 2025-12-17 14:01 GMT
புதுக்கோட்டை மாநகராட்சி புதுக்குளம் பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் புதிய கட்டிடம் ரூ.3.35 மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன், மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர். மேலும் இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் காந்திமதி, பிரேம் ஆனந்த், ஒப்பந்தக்காரர் ராஜதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.