புதுக்கோட்டை எம்எல்ஏ பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 லட்சம் நிதி!!
புதுக்கோட்டை எம்எல்ஏ பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 லட்சம் நிதி வழங்கினார்.;
By : King 24x7 Desk
Update: 2025-12-17 13:43 GMT
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மச்சுவாடி சீனிவாசா நகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நேரில் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் உடனடியாக வழங்கி மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவின் செயலைப் பார்த்து அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிகழ்வின்போது கழக முன்னோடி கலையரசன், வட்டக் கழகச் செயலாளர் ரவிஸ்ரவி, மாமன்ற உறுப்பினர் பால்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.