புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் தினத்தையொட்டி சிறப்பு கூட்டம்!!

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் தினத்தையொட்டி சிறப்பு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-17 13:45 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டல அலுவலக நுழைவுவாயில் முன்பு ஒய்வூதியர் தினம் விளக்க கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டல செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பஞ்சப்படி முறையாக வழங்கப்படவில்லை 16 மாதமாக ஓய்வு பணம் சரிவராக கொடுக்கப்படவில்லை நீதிமன்றம் தீர்ப்பை ஏற்று நிலுவைத்தொகை வழங்குவதற்கு வழங்க வேண்டும் மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும் எங்கள் உரிமை முடக்கப்பட்டது என்று அக்கூட்டத்தில் கோரிக்கைகளை. பொதுச் செயலாளர் இளங்கோவன் முன்வைத்தார் நிகழ்வில் தலைவர் ஜெயராமன் பொருளாளர் பாலசுப்பிரமணியன் அறந்தாங்கி பட்டுக்கோட்டை புதுக்கோட்டை பொன்னமராவதி பல்வேறு கிளைஉள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News