நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன் தொடர்ச்சியாக இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாமினை பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன் தொடர்ச்சியாக இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையாக நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு, கல்லூரி மாணவியர்களுக்கு படிவம் 6-னை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக் கொண்டார்.;

Update: 2025-12-17 13:09 GMT

நாமக்கல் மாவட்டத்தில், 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு, 97.குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணிகள் ஆகியவை குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் குழுவாக பிரிந்து இது குறித்து விவாதிக்கும் பொழுது பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள இயலும். தேர்தல் நாளன்று வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். அதன்படி, 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதாவது 31.12.2007 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்த்திட வேண்டும்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையாக 01.01.2026 தகுதி நாளில் 18 வயது பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்களிடம் படிவம் 6-ஐ பெற்று தொடர்புடைய பாகம் எண்ணில் சேர்க்கும் நடவடிக்கை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் 18 வயது பூர்த்தி அடைந்த நாளதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத இளம் வாக்காளர்களுக்கு 15.12.2025 முதல் கல்லூரி வளாகங்களிலேயே வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் படிவம் எண் 6-ஐ வழங்கி பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப்பெற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இக்கல்லூரியில் முகாம் நடைபெற்று வருகிறது. எனவே, கல்லூரி மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  ஆட்சியர்  தெரிவித்தார்.மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  ஆட்சியர் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாமில் நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்ப்பு பணி நடைபெறுவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட  ஆட்சியர்  பரமத்திவேலூர் வட்டம், குன்னமலை ஊராட்சி பகுதியில் மயானம் அமைத்தல் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்.இம்முகாமில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  கு.செல்வராசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்  .பி.எஸ்.லெனின், கல்லூரி முதல்வர், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜேஸ்கண்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Similar News