வேலூர் பேரூர் கழகம் சார்பில் தி.மு.க ஆலோசனைக் கூட்டம்.
வேலூர் பேரூர் கழகம் சார்பில் தி.மு.க பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
பரமத்தி வேலூர்,ஆக.1: பரமத்தி வேலூர் தாலுகா வேலூர் தி.மு.க பேரூர் கழகம் சார்பில் பொது உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் கவண்டம்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வேலூர் நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக இடங்களில் வெற்றிபெருவது அதற்காக நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுந்தர்,வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி,தி.மு.க பிரமுகர் கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் செந்தில்,பாலகிருஷ்ணன மற்றும் இளைஞர் அணி பொருப்பாளர்கள்,மகளிர் அணி உட்பட பலர் கலந்து கவண்டனர்.