ஆரணியில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் சொற்பொழிவு
ஆரணி, செப் 1. ஆரணியில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் மற்றும் ஆரணி தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து மகிழ்ச்சியான குடும்பத்திற்கான சாவி என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.
ஆரணியில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் மற்றும் ஆரணி தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து மகிழ்ச்சியான குடும்பத்திற்கான சாவி என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இச்சொற்பொழிவில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின இயக்குநர் இராஜயோகினி பிரம்மா குமாரி உமா என்பவர் "மகிழ்ச்சியான குடும்பத்திற்கான சாவி "என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், அரிமா சங்கத்தின் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் உதயசூரியன், ஆரணி நகர காவல் ஆய்வாளர் டி.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆரணி தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.பக்ருதீன்அலிஅகமது தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் தொழிலதிபர் பி.நடராஜன், பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் ரமேஷ், அரிமா சங்க செயலாளர் ஏ.எம்.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.