அரையாளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

ஆரணி, செப் 1. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆரணி தெற்கு மண்டலம், அரையாளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை பயிரலரங்கம் ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது.

Update: 2024-09-01 14:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆரணி தெற்கு மண்டலம், அரையாளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை பயிரலரங்கம் ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது. இதில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேர்க்கை இயக்க பொறுப்பாளர் சைதை வ.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினார். பாஜக நிர்வாகி அரையாளம் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் வடக்கு மண்டல தலைவர் குணாநிதி, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேட்டுஜி, முன்னாள் மாவட்ட செயலாளர் அலமேலு, முன்னாள் நிர்வாகிகள் தியாகு, நடேசன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News