கடமலைக்குண்டு அருகே தூக்கிட்டு விவசாயி தற்கொலை
சின்னச்சாமி யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலைக்குண்டு அருகே பாலுாத்து என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் சின்னச்சாமி 50. இவர் விவசாயம் செய்து வருகிறார்.குடிப்பழக்கம் இருந்த இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னச்சாமியின் மனைவி பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்