தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொண்ற தாய்.
பரமத்தி வேலூர் அருகே தகாத உறவால் பெற்ற குழந்தையை குணற்றில் வீசி தாயால் பரபரப்பு.
பரமத்திவேலூர், செப்.2: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தையா (25) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சினேகா (22). இவர்களுக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பூவரசி (4) என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. முத்தையாவும், மனைவி சினேகாவும் சென்னை, காட்டுப்பாக்கத்தில் தங்கி கூலிவேலை பார்த்து வந்தனர். கணவன்,மனைவி இருவரும் கடந்த 3 வருடங்களாக பிரிந்து தாய்,தந்தையுடன் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. சினேகா சென்னை காட்டுப்பாக்கத்தில் கூலி வேலை செய்த போது அங்கு வேலை பார்த்த வந்த நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், காந்திபுரத்தை சேர்ந்த சரத்துக்கும் (21) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சினேகா தனது குழந்தை பூவரசியை விட்டு விட்டு, சரத்துடன் சென்னையில் இருந்து பெற்றோர்களுக்கு தெரியாமல் நாமக்கல் வந்துள்ளனர். இந்த தகவல் முத்தையா மற்றும் சினேகாவின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தையுடன் நாமக்கல் வந்த சினேகாவின் பெற்றோர் மற்றும் சரத்தின் பெற்றோர்கள் காதல் ஜோடியை சேர்த்து வைக்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் சினேகா தனது குழந்தை பூவரசியை அழைத்துக் கொண்டு பரமத்தி வேலூர் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பாளையத்தில் தனது பெரியப்பா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மதியம் சினேகாவும் அவரது பெரியப்பா மகளும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பூவரசியை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றிற்கு சென்று குழந்தை பூவரசியை தூக்கி கிணற்றில் வீசியுள்ளனர். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது குழந்தை கிணற்றில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் கிணற்றில் வீசிய குழந்தையை இறந்த நிலையில் மீட்டுள்ளனர். பின்னர் இது குறித்து வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீசார் அங்கு இறந்த குழந்தையின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். அதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் சினேகா மற்றும் அவரது உறவினர் பெண் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.