வருசநாடு அருகே முறுக்கோடை அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது
மனித வரலாறும் பண்பாடும்" என்ற தலைப்பில் சமூக ஆர்வலார் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் கடமலை - மயிலை ஒன்றியத்தில் முறுக்கோடை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், வரலாறு"மனித வரலாறும் பண்பாடும்" என்ற தலைப்பில் சமூக ஆர்வலார் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவில் பங்கேற்ற மாணவி, வருசநாடு க.செல்வப்பிரியா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்