கடமலைக்குண்டு அருகே கோவில் பூட்டை உடைத்து திருட்டு போலீசார் விசாரணை
கோவில் பூட்டை உடைத்தும் , அருகில் இருந்த கடைகளின் பூட்டை உடைத்ததால் கோவில் பூசாரி கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் கடமலைக்குண்டு பகுதியில் அய்யனார்புரம் அருகே உள்ள அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன் தினம் இரவில் கதவின் பூட்டு, உண்டியலை உடைத்து பணத்தை யாரோ திருடி சென்று விட்டதாக தெரிகிறது.கோயில் அருகே இருந்த இரு கடைகளையும் உடைத்து பொருட்களை திருடி சென்று விட்டனர். இந்நிலையில் கோயில் பூஜாரி முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடமலைக்குண்டு போலீசார் திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.