அக்ராபாளையம் கங்கை அம்மன் ஆலய விழா
ஆரணி. செ.2 அக்ராபாளையம் கங்கை அம்மன் ஆலய விழாவில் அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.;
ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய திருவிழா நடைபெற்றது மேலும் விழாவில் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இன்று தங்களுடைய நேர்த்திக்கடனாக ஊருக்கு வெளியில் இருந்து தீச்சட்டிகளை ஏந்திக்கொண்டு 108 பெண்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தங்களுடைய முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு லாரி டிராக்டர் ஜேசிபி எந்திரம் கார் உள்ளிட்டு வாகனங்களை கட்டி இழுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் குழந்தை வரம் வேண்டியும் திருமண வரன் வேண்டியும் வீடுகளைக் கட்டி புது குடித்தனம் செல்ல வேண்டியும் அம்மனை வேண்டி நேர்த்தி கடன் இருந்த பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்து சென்று கங்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வானில் இருந்து அம்மனை வழிபட்டு தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் விழாவில் அக்ராபாளையம் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கங்கை அம்மனை வணங்கி வழிபட்டனர்