தோகைமலை ஒன்றிய சிபிஐ சார்பில் இடைக்கமிட்டி குழு கூட்டம்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் இந்திய கம்யூனீஸ்ட் கட்சி சிபிஐ யின் இடைக்கமிட்டி குழு கூட்டம் பெரியபுத்தூரில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கணேசன் (எ) மாரியப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநில குழு முடிவுகள் மாவட்ட குழு செயல்பாடுகள் .இடைகமிட்டி குழ செயல்பாடுகள் கிளை செயல்பாடுகள் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து ஸ்தல பிரட்ச்சனை சம்பந்தமாக தோகைமலை ஒன்றியத்தில் பெரியபுத்தூரில் நத்தம் புறம்போக்கு சர்வே என் 214/1A யில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஏற்க்கனவே பட்டா வழங்கிய அனைத்து பட்டா தாரர்களுக்கும் சரியான நில அளவை செய்து மறுபடியும் 65 நபர்களுக்கும் பட்ட வழங்க வேண்டும், தோகைமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முறையான பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை யின்றி கல்விக்கடன் வழங்க வேண்டும், தோகைமலை பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மோகனா, கோவிந்தம்மாள், ராஜேஷ்வரி, ராமு, மலர்க்கொடி, குமாரிசெல்வி, பஞ்சவர்னம், ரேவதி, நீலவதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.