தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது
கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை 2 -ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த மாணவி, ஆகஸ்டு 9-ஆம் தேதி இரவு பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலை கண்டிக்கின்ற வகையில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலுக்கிணங்க மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தகுந்த தண்டனையையும் வழங்கிட வேண்டும் எனவும். இந்திய நாட்டில் இது போன்ற குற்ற செயல்கள் வேறு எங்கும் நடந்திடாதவண்ணம் பெண் குழந்தைகள், மாணவியர்கள். பெண் ஊழியர்கள் என ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியும் மெழுகுவர்த்தி ஏந்தி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆ.செல்வம் பொதுச்செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஜெ.மூர்த்தி மாவட்டத்தலைவர், க.நீதிராஜா மாவட்டச்செயலாளர், மாவட்டத் துணைத்தலைவர்கள் பெ.சந்திரபாண்டி, ஜெ.மகேந்திரன், த.மனோகரன் மாவட்ட இணைச்செயலாளர்கள் ஆ.பரமசிவன், மு.ராம்தாஸ், சி.பெரியகருப்பன்,சி.க.சுஜாதா மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர்,சு.கிருஷ்ணன் மாவட்டத்தலைவர் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்,சு.பாண்டிச்செல்வி மாநிலச்செயலாளர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்,மு.ஆனந்தவள்ளி மாநிலச் செயலாளர் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம்,மு.பஞ்சவர்ணம் மாநிலத்தலைவர் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்கம், க.சந்திரபோஸ் மாவட்டப்பொருளாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்