விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் கு.பார்த்திபன் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய விசைப்படகு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பார்த்திபன் கடந்த 2015ஆம் வருடம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதையொட்டி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிற்சங்க முன்னாள் தலைவர் பார்த்திபன் உருவ படத்திற்கு ஆயிரக்கணக்கான மீன்பிடிதொழிலாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜவகர், மற்றும் தமிழர் விடியல் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.