ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
ஆஞ்சநேயருக்கும் ,வீர சிவபெருமானுக்கும். 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஒடை தெருவில் அமைத்திருக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆவணி மாத மகா அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கும் ,வீர சிவபெருமானுக்கும். 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜை பங்கேற்ற பக்தர்களுக்கு துளசி,செந்துாரம் ,கேசரி ,வடை அன்னதானம் வழங்கப்பட்டது .இந்த சிறப்பு பூஜையில் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்