தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் தேசிய கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்ற மத்திய அரசின் நிலையை கண்டித்து தி.க. வினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
மாநில கல்வி கொள்கைக்கு எதிராக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் சமஸ்கிருத திணிப்பு, அரசு பள்ளிகளுக்கு முழு விழா நடத்தி நவோதயா பள்ளிகளை கொண்டு வருவதும் சமூக நீதியை வரவிடாமல் சனாதனத்தை திணிப்பதும், வானவியல் பாடத்தில் ஜோதிடத்தை இடம் பெற வைப்பதும், வேதம் மந்திரம் பாராயணம் மூட நம்பிக்கைகளை கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் உடனடியாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்து தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை கிட்ட அங்காடி முன்பாக திராவிட கழகத்தினர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருள்தாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். சிறப்பு பேச்சாளர் கடவாசல் குணசேகரன் உரையாற்றினார் துரைராஜ் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டில் கலந்து கொண்டனர். . மாணவர் போராட்டத்தைதூண்டாதே. தேசிய கல்விக்கொள்கையை திணிப்பதா தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா நிதி தர மறுக்கும் இந்திய அரசுக்கு வரியை கேட்க உரிமை உண்டா, விடமாட்டோம் விடமாட்டோம் தமிழ்நாட்டு மாணவர்கள் உரிமை கள்பறிபோக விடமாட்டோம் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.