ராசிபுரத்தில் மழை காலங்களில் மின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள்,நுகர்வோர் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்.
ராசிபுரத்தில் மழை காலங்களில் மின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள்,நுகர்வோர் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு முகாம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கரூர் மண்டலம் சார்பில் மழைகாலங்களில் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாமானது நடைபெற்றது. முகாமில் தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமையில் கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் மழைக்காலங்களில் மின்சாரத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,மின் பொருட்களை எவ்வாறு கையாள்வது குறித்தும் , மின் சிக்கனம், மற்றும் விழிப்புணர்வு பற்றி பொது மக்களுக்கு எடுத்துரைத்தும் மேலும் நுகர்வோர் அலுவலர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு மழைக்காலங்களில் முறையாக மின்சாரத்தை கையாளுவது, உபகரணங்கள் பயன்படுத்துவது, இடி மின்னலின் போது மின் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாத்துக் கொள்வது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இம் முகாமில் ராசிபுரம் மின் செயற்பொறியாளர் ஆ. சபாநாயகம், மற்றும் நாமக்கல் செயற்பொறியாளர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், பரமத்தி வேலூர், மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பாதுகாப்பு கரூர் மண்டலம், திட்டமிடல், மேலும் மல்லூர் உதவி செயற்பொறியாளர் சத்தியமாலா, மெட்டாலா உதவி பொறியாளர் தீபன், நாமகிரிப்பேட்டை - 2 உதவி பொறியாளர் உமா, மெட்டாலா சிறப்பு நிலை முகவர் பழனிசாமி, சிங்களாந்தபுரம் முதல்நிலை முகவர் சந்திரசேகரன், அத்தனூர் மின்பாதை ஆய்வாளர் இளங்கோ, முள்ளுக்குறிச்சி கம்பியாளர் ராஜீ, மதீப்பீட்டு அலுவலர் பாலசுப்ரமணியம், உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள், பொதுமக்கள், கட்டிட பராமரிப்பாளர்கள், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் மின் வயரிங் ஒப்பந்ததாரர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..