கடலூரில் சுனாமி தினம் அனுசரிப்பு
கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நடந்தது
கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் சுனாமி தினம் அனுசரிப்பு. கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சுனாமி நினைவு சின்னத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மீனவர் அணி துணை தலைவர் கவியரசன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் தலைமையில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் எம்.கார்த்திகேயன் முன்னிலையில் கடலில் பால் ஊற்றி மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஞானவேல், கடலூர் கிழக்கு மாநகர நிர்வாகிகள் மணி இந்திரஜித், கிருஷ்ணன், ராஜேஷ், சுதாகர், ஆனந்த், வெங்கடேஷ், கவியரசன், போர் முருகன், முருகன் ,முத்துக்குமார் சரவணன், தேவனாம்பட்டினம் மகேஷ், பாஸ்கர், மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வைரமூர்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.