விருத்தாசலம் அருகே வாலிபர்கள் மீது தாக்குதல்

3 பேர் கைது

Update: 2024-12-26 16:30 GMT
நெய்வேலி அடுத்த குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சித்தார்த்தன் (வயது 27). இவர் விருத்தாசலம் அடுத்த கானாதுகண்டான் டாஸ்மாக் கடை பின்புறத்தில் அமர்ந்து நேற்று முன்தினம் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரிந்த நபர்கள் கைகளில் வைத்திருந்த கத்தி பீர் பாட்டில்களால் சித்தார்த்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த கானாது கண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் பிரகாஷ் (25), வேலாயுதம் மகன் வேல் அழகன் (39), குமார் மகன் பாலாஜி (27), ஆகிய 3 பேரும் சென்று தடுத்துள்ளனர் அப்போது ஆத்திரத்தில் அந்த கும்பல் 4 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சித்தார்த்தன் மற்றும் பிரகாஷ், வேல்அழகன், பாலாஜி ஆகிய 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சித்தார்த்தன் மீது முன் விரோத தகராறை மனதில் கொண்டு இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது. விசாரணையில் கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (57), பிரபாகரன் (24), கஜா (23) உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மேற்கண்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News