அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது
ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டியில் அதிமுக சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது .ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் T. R. N.வரதராஜன் தலைமையில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது . போடிதாசன் பட்டி ,கோத்தலூத்து ஊராட்சி கிளை நிர்வாகிகளிடம் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கப்பட்டது.இதில் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் M மதியரசன்,கிழக்கு ஒன்றிய பொருளாளர் R Pலோகநாதன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் P ராஜபாண்டி ரங்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் K சுப்பிரமணி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.