கறம்பக்குடி கண்டியன் தெருவில் பலத்த காற்று மழையால் இரண்டு வீடுகளின் மேல் மரம் விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே இப்படி மழை வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிலர் தங்கள் வீடுகளின் அருகில் இருக்கும் மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.