சாலையை ஆக்கிரமித்து செடி வளர்க்கும் கவுன்சிலர்: புகார்
விளாத்திகுளத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பே சாலையை ஆக்கிரமித்து கவுன்சிலர் செடி வளர்ப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விளாத்திகுளத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பே சாலையை ஆக்கிரமித்து கவுன்சிலர் செடி வளர்ப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து, 2-வது வார்டான சாலையம் தெருவிற்கு செல்லும் சாலையானது ஏற்கனவே குறுகலான சாலையாக இருப்பதாலும் NO PARKING ZONE -ல் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டு இருப்பதாலும் அந்த சாலை வழியாக பள்ளி, மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும், நூலகத்திற்கு செல்வதற்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு இடையில் தான் சென்று வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இச்சாலையில், விளாத்திகுளம் பேரூராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் சாலையில் சிறு சிறு தொட்டிகள் மூலம் செடிகளை வளர்ப்பதாகக்கூறி சாலையை ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய கடை பேனர்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறார். விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பே நடக்கும் இந்த அட்டூழியத்தை இவ்வழியாக செல்லும் பேரூராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் சென்று வரும் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், செயல் அலுவலர் மகேஸ்வரன், பேரூராட்சி மேற்பார்வையாளர் மீனாட்சி சுந்தரம் போன்ற ஒருவரின் கண்களிலும் படவில்லை என்பது பலரது முனுமுனுப்பாக இருந்து வருகிறது. 2-வது வார்டு பெண் வார்டு கவுன்சிலர் ஒருவரே இதுபோன்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையை தனது சொந்த இடம் போல எண்ணி செடிகள் வளர்ப்பதும் தன்னுடைய கடை விளம்பர பேனர்களை வைப்பதுமாக அராஜகத்தில் ஈடுபட்டு வருவது விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் பேசும் பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் உடனடியாக விளாத்திகுளம் காவல்துறை அதிகாரிகள் பொதுக்கள் செல்லும் சாலையில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள செடிகள் மற்றும் கடை விளம்பர பேனர்களை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதும், அப்பகுதியில் NO PARKING ZONE ல் இருசக்கர வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.