பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீடுகள் இடிந்து சேதம்.,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீடுகள் சேதமடைந்து காணப்படுவதால் வீடுகளில் குடியிருக்க இலங்கை தமிழர்கள் அச்சம் - வீடுகள் கட்டித் தர கோரிக்கை வைத்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மனு அளித்தும் பயனில்லை என வேதனை.,

Update: 2024-09-04 06:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீடுகள் சேதமடைந்து காணப்படுவதால் வீடுகளில் குடியிருக்க இலங்கை தமிழர்கள் அச்சம் - வீடுகள் கட்டித் தர கோரிக்கை வைத்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மனு அளித்தும் பயனில்லை என வேதனை., பொள்ளாச்சி.. செப்டம்பர்.,04 பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் பகுதியில் எல்.எப். காலனியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 40.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களை பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளில் குடியமைத்தினர்., முகாமில் உள்ள வீடுகள் சுற்றியும் மரங்கள் இருந்ததால் காற்று அடிக்கும் நேரங்களில் மரக்கிளைகள் வீடுகள் மேல் விழுந்தே மேற்கூரைகள் உடைந்து மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழை நீர் கசிந்து சுவர்கள் சேதம் அடைந்துள்ளது என்றும், கூலி வேலைக்கு செல்லும் தாங்கள் கடன் வாங்கி மேற்கூரைகள் சுவர்களை சீரமைத்து வந்தாலும் வீடுகள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் குடியிருக்க அச்சமாக இருப்பதாக இலங்கைத் தமிழர்கள் தெரிவித்தனர்., மேலும் முகாமில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருண்ட சூழ்நிலையில் காட்டுப்பன்றி,  மலைப்பாம்பு, யானை போன்ற வனவிலங்குகள் தொல்லையும் அதிகரித்து வருவதாகவும், இதனால் இந்த முகாமில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக இலங்கைத் தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்., மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், வாரம் வாரம் தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று சார் ஆட்சி வர சந்தித்து மனு கொடுத்து வந்தாலும் எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், எனவே அச்சத்துடன் வாழ்ந்து வரும் எங்களுக்கு வீடுகள் கற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்., பேட்டி.,01 ராஜேஸ்வரி., 02., விஜயலட்சுமி.,இலங்கைத் தமிழர்..

Similar News