திருச்சி முதல் மீமிசல் வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்க பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நான்கு வழி சாலை ஓரங்களில் பாலம் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் பணியாளர்கள் இரும்பு கம்பிகளை கொண்டு கட்டமைப்பு ஏற்படுத்தி சிமெண்ட் கொட்டி பாலம் அமைக்கப்படுகின்றன.