மீனவர் நலவாரிய துணைத் தலைவரை அவமதித்த மீன்வளத்துறை உதவி இயக்குநர்

மீனவர்

Update: 2024-12-26 12:08 GMT
பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வடுகநாதன், மல்லிப்பட்டினம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் இளங்கோ, சேதுபாவாசத்திரம் செல்லக்கிளி, பாரம்பரிய நலசங்க பொருளாளர் முகமதுஜலாலுதீன், விசைப்படகு உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ஹபீப்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள், மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களுடன் அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களை மாற்றம் செய்து புதிய அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். டிச.25 அன்று கரையில் இழுத்ததாக கூறி நான்கு தஞ்சை மாவட்ட விசைப்படகுகளை புகைப்படம் எடுத்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து டிச.27 மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என்றும், அதனை தொடர்ந்து தொடர் வேலைநிறுத்தம் செய்வது என்றும் முடிவெடுத்தனர். மாவட்ட விசைப்படகு சங்கத்தினரின் பிரச்சினை குறித்து கேட்டறிந்துவிட்டு தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மணிகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீனை மரியாதை குறைவாக பேசிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார், இது மீனவர் சமுதாயத்தையே அவமரியாதை செய்த செயலாகும். இதற்காக தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News