சங்ககிரி செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்த குட ஊர்வலம்..
சங்ககிரி: செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்த குட ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு....
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தீர்த்த குட ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு... சங்ககிரி அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 23ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து செப்.3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கிராம சாந்தியும், செப்.4 ஆம் தேதி புதன்கிழமை கணபதி பூஜையும், பாவனி கூடுதுறைக்கு சென்று பக்தர்கள் காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்து வி.என்.பாளையம் நல்ல கிணற்றிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பவானி பிரதான சாலை, புதிய எடப்பாடி வழியாக சென்று கோயிலை வந்தடைந்த பின்னர் முதற்கால பூஜைகள் நடைபெற்றது . செப்.5 ஆம் தேதி வியாழக்கிழமை தில்லை விநாயகர் கோயிலில் இருந்து முளைபாலிகை எடுத்து ஊர்வலமாக வருவதலும்,ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லாண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மூன்றாம் கால கட்ட யாக சாலை பூஜைகளும் நடைபெற உள்ளது. செப்.6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நான்காம் கால கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் சுவாமிகள் எழுந்தருளியுள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.