கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு தீயணைப்புத்துறை வீரர்கள் உயிருடன் மீட்பு....
சங்ககிரி:கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு தீயணைப்புத்துறை வீரர்கள் உயிருடன் மீட்பு....
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி ஒலப்பாளையம் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். அரசிராமணி கிராமத்திற்குட்பட்ட ஒலப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி மனைவி சாந்தா. இவர் வீட்டில் வளர்த்து வரும் பசுமை மாட்டினை தினசரி மேய்ச்சலுக்கு பிடித்து சென்று வருவது வழக்கம். அதே போல் வியாழக்கிழமை அன்று மாட்டை மேய்ச்சலுக்கு பிடித்து சென்றுள்ளார். அப்போது விவசாயின் பிடியில் இருந்து சென்ற மாடு எதிர்பாரதவிதமாக அப்பகுதியில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து விவசாயி சாந்தா, ஊர் பொதுமக்கள் எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி பசு மாட்டினை உயிருடன் மீட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.