திருமயத்தில் முகூர்த்த நாளை முன்னிட்டு இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இன்று 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என திருமயம் சார் பதிவாளர் அலுவலகம் சார்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு சார் பதிவாளர் தெரிவித்திருக்கிறார்.