ஆண்டிபட்டி அருகே ஊரணி சிதிலமடைந்து புதர் மண்டி உள்ள ஊரணியினை சீரமைக்க கோரிக்கை
நீர் வரத்து கால்வாய்களில் புதர் மண்டி கிடக்கிறது. ஊரணியின் நீர்த்தேக்க பகுதியில் குப்பை குவிந்து, செடி கொடிகள் வளர்ந்து உள்ளது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் தெப்பம்பட்டி ஊராட்சியில் வேலப்பர் கோயில் செல்லும் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள ஊரணி சிதிலமடைந்து புதர் மண்டி கிடக்கிறது.தெப்பம்பட்டியை ஒட்டி உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சிற்றோடை மூலம் வரும் நீர் இந்த ஊரணியில் தேங்குகிறது. ஊரணியில் நீர் தேங்குவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சமன் செய்யப்படுகிறது. பாசனக் கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகமாகும். கடந்த சில ஆண்டுக்கு முன் சீரமைக்கப்பட்ட ஊரணி தற்போது மீண்டும் சிதிலமடைந்து உள்ளது. நீர் வரத்து கால்வாய்களில் புதர் மண்டி கிடக்கிறது. ஊரணியின் நீர்த்தேக்க பகுதியில் குப்பை குவிந்து, செடி கொடிகள் வளர்ந்து தேங்கும் நீருக்கு பாதிப்பு ஏற்படுவதாக உள்ளது. ஊரணி மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை மழைக்காலம் துவங்கு முன் சீரமைத்து முழு அளவில் தண்ணீர் சேர்க்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்