ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பாண்டியராஜன், சமூக ஆர்வலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரேமலதா தலைமையில் நடந்தது.ஆண்டிபட்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பாண்டியராஜன், சமூக ஆர்வலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர். மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்தும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மருத்துவமனை முகப்பு பகுதியில் பறவைகளின் எச்சத்தால் ஏற்படும் சுகாதார பாதிப்பை தவிர்க்க தகர ஷெட் அமைக்கவும், இதற்கான செலவுகளை தன்னார்வ அமைப்புகள் மூலம் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது. வர்த்தக பிரமுகர்கள் ரவிபிரகாசம், ரமேஷ்குமார், ஆண்டிபட்டி ரோட்டரி சங்க தலைவர் பழனிக்குமார், டாக்டர்கள் ஞானசுந்தர், லலிதா, சித்தா பிரிவு மருந்தாளுநர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.