ஆரணியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து தாலுக்கா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.

ஆரணி செப் 6: ஆரணியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-09-06 10:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாளை சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு ஆரணியில் விநாயகர் சிலை வைத்து விழா நடத்துபவர்களை அழைத்து வட்டாட்சியர் கௌரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வருவாய் ஆய்வாளர் நித்யா வரவேற்றார். கூட்டத்தில் தாசில்தார் கௌரி பேசியது: பெரிய பிள்ளையார்கள் களிமண்னால் செய்ததாக இருக்க வேண்டும், பிரசாதங்கள் பாக்கு தட்டு, வாழை இலை, உள்ளிட்ட மக்கும் பொருட்களில் வழங்க வேண்டும், போலீசார் அனுமதி தரும் இடத்தில் மட்டுமே சிலை வைக்க வேண்டும், பாதுகாப்புடன் சிறப்பாக விழாவை கொண்டாடுங்கள் என்று பேசினார். கூட்டத்தில் நகர இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், ஷாபூதீன், தீயணைப்பு நிலைய அலுவலர் பூபாலன்(பொறுப்பு) மின்வாரிய செயற்பொறியாளர் ரவி, இந்து முன்னணி தாமு, பாஜக கோபி, மற்றும் விழா நடத்துபவர்கள் பங்கேற்றனர்.

Similar News