அண்ணாநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்.
பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணாநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
பரமத்தி வேலூர்,செப்.06: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5 ஆம் தேதி அதிகாலை மங்கள கணபதி யாக வேள்வி,நவகோள் வேள்வி,மஹா லட்சுமி வேள்வி,மங்கல மகா பூருணாகுதி,மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தீப வழிபாடு,புன்யாகம்,வாஸ்து சாந்தி,பூமி பூஜ,யாகசாலை பிரவேசம்,முதற்கால யாக பூஜை,முதற்கால மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 6 ஆம் தேதி அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை,நாடி சந்தானம்,பூர்ணாகுதி,தீபாராதனை,யாத்ரதானம்,கலசம் புறப்பாடு நடைபெற்று அதனை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் தசதானம்,சிறப்பு அலங்காரம் தீபாராதனை கோ பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.