ஒத்தக்கடையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் நடைபெற்றது
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் முதல் உறுப்பினராக தேசியத் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல் உறுப்பினராக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் எச் ராஜா இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக மதுரை கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் பொறுப்பாளர் தங்க வேல்சாமி முன்னிலையில் மதுரையின் மூத்த உறுப்பினர் ஹர்சிங் இணைந்தார்.இந்நிகழ்வில் வாசு ராஜசேகர் அனந்த ஜெயம் உதயகுமார் பொதுச் செயலாளர் மூவேந்தரன் கண்ணன் கோச பெருமாள் உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்