ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் ஆலங்குடி கலிபுல்லா நகரைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவா மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் குணசேகரனை அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.