அரசு பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
வாழ்த்து தெரிவித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்
பல்லடம் ஒன்றியம் சேகாம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுமதி.பள்ளியை கோவிலாக வகுப்பறையை கருவறையாக புத்தகங்களை வேத நூல்களாக கொண்டு மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார். ஆசிரியர் சுமதி அவர்களின் பணியை பாராட்டியும் கௌரவ படுத்தியும் தமிழக அரசு அறிவித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் 2024 மாநில நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் பெற்றுள்ளார்.விருது பெற்ற ஆசிரியை சுமதி அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி சார்பாக மாலை அணிவித்து பட்டாடை அணிவித்து இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமசாமி , சிவபிரகாஷ் , செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.