மாணிக்காபுரம் ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்
பல்லடம் தாலுகா மாணிக்கபுரம் ஊராட்சி ஸ்ரீ லட்சுமி நகரில் சாலை குண்டும் குழியும் ஆக காணப்பட்டது.இதனை அடுத்து அந்த சாலையினை சீரமைத்து தர வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் நிதியில் அவரது தலைமையில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் துணைத் தலைவர் விஜயகுமார் வார்டு உறுப்பினர்கள்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.