ஆண்டிபட்டி அருகே குன்னூரில் மண்டு கருப்பசாமி திருக்கோவில் திருவிழா நடைபெற்றது
மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூரில் பல நூறு ஆண்டுகளாக வழிபட்டு வரும் ஊர்காவலன் மண்டு கருப்பசாமிதிருக்கோவில் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் வழக்கம்போல் இந்த இந்த வருடம் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும் வகையில் விழா கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று இரவு ஒரு மணி அளவில் ஆடு ரத்தம் குடிக்கும் நிகழ்வும் முன்னதாக முதல் நாள் அன்று சாமி ஆற்றுக்கு சென்று விக்கிரங்களை கழுவி சுத்தப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது . இந்த திருவிழாவில் கருப்புசாமிக்கு சாமி ஆளியாக சுரேஷ் குமார் என்பவர் பரம்பரையாகவும் ஆடி வருகிறார் அதேபோல் கோயில் பூசாரி அக்கிரமத்து நாட்டாமை பாலசுந்தராஜ் மற்றும் அருள் வாக்கு கூறும் அருவாள் மீது ஏறி வரும் சுவாமியாக அழகர்சாமி என்பவரும் ,பெட்டி தூக்கி வருபவராக பழனிச்சாமி என்பவரும் ஆடு வெட்டுபவராக கண்ணையா மகன் பாண்டி என்பவரும் ஆடு ரத்தம் குடிக்கும் பொழுது அதை சுத்தப்படுத்தும் செயல்களை கென்னடி மற்றும் பாண்டி சுவாமிநாதன் ஆகியோரும் செய்து முடித்தனர் இந்த நிகழ்வை காண பல்வேறு கிராமப் பகுதியில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து பலன் அடைந்தனர்