விநாயகர் சிலை வைக்கும் இடங்கள் கரைக்கும் இடங்களை எஸ்.பி.ராஜேஸ்கண்ணா ஆய்வு
பரமத்தி வேலூர் பகுதியில் விநாயகர் சிலை வைக்கும் இடங்கள் கரைக்கும் இடங்களை எஸ்.பி.ராஜேஸ்கண்ணா ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 52 விநாயகர் சிலைகளும் பொதுமக்கள் சார்பில் 12 விநாயகர் சிலைகளும் வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா பரமத்திவேலூர் பகுதியில் விநாயகர் சிலை அமைக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ள இடங்களில் போலீசாரின் உரிய அனுமதிகள் பெறப்பட்டு உள்ளதா, விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில் பள்ளிகள், மருத்துவமனை உள்ளதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து விநாயகர் சிலைகளை கரைக்கப்பட உள்ள உள்ள பரமத்திவேலூர் காவிரி ஆற்றிற்கு சென்று பார்வையிட்டார். விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றுக்குள் அதிக ஆட்களை அழைத்துக் சென்று கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் விநாயகர் சிலைகளை கிரேன் இயந்திரத்தின் மூலம் ஆற்றுக்குள் எடுத்துச் சென்று கரைக்கவும், விநாயகர் சிலை கரைக்கும் பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும் வலியுறுத்தினார். மேலும் பேரூராட்சி பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களையும் உடனடியாக அகற்றவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.