ஆண்டிபட்டி அருகே மது பாட்டில் வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்
சட்ட விரோதமாக விற்பனைக்காக மது பாட்டில் வைத்திருந்த முத்து கருப்பன் என்ற செந்தில் என்பவர் மீது வழக்குப்பதிவு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு போலீசார் குன்னூர் அம்மாச்சியாபுரம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டனர் .இந்த ரோந்து பணியின் போது குன்னூரில் இருந்து அம்மாச்சியாபுரம் செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததற்காகமுத்துக்கருப்பன் என்ற செந்தில் என்பவரை பரிசோதனை செய்து அவர் வைத்திருந்த மது பாட்டில்களை கைப்பற்றி கானா விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்