ஆண்டிபட்டி அருகே சிங்கராஜபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது
பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதங்கள் வழங்கப்பட்டன
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது .. ஸ்ரீ ஆதிசக்தி விநாயகர் கோவிலில் சிலை அமைத்து சிங்கராஜபுரம் முக்கிய வீதிகளில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் சிங்கராஜபுரம் பொதுமக்கள் விநாயகரை தரிசனம் செய்தனர் விழா கமிட்டியாளர்கள் தலைமையில் சிறப்பு அன்னதானம் காலை முதல் வழங்கப்பட்டது விநாயகர் ஊர்வலத்தின் போது சுண்டல் மற்றும் பிரசாதங்கள் வழங்கினர். நிகழ்ச்சியை சிங்கராஜபுரம் விழா கமிட்டியாளர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்