ஆண்டிபட்டி அருகே மகள் காணவில்லை என தந்தை புகார்
10ம் வகுப்பு படித்துள்ள பாண்டிச்செல்வி 18, ஆண்டிபட்டியில் தனியார் நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஜெ.ஜெ., நகரைச்சேர்ந்தவர் கருப்பசாமி, 10ம் வகுப்பு படித்துள்ள இவரது மகள் பாண்டிச்செல்வி 18, ஆண்டிபட்டியில் தனியார் நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார் .நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் மாயமானது குறித்து தந்தை புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்