நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு!
நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தங்களது பிரார்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை MGR நகரில் (இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன்படி (செப்டம்பர் -8) ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், குங்குமம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாரதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தங்களது பிரார்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாமக்கல் வாராஹி கோவிலில் நடைப்பெற்று வருகிற கட்டிட திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற வரை நிதியுதவி வழங்கி வருகின்றனர்.இதுகுறித்து முத்தானந்தா சுவாமிகள் கூறியது வருமாறு.. வாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, வளர் பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். வாராஹி அம்மனை மனமுருகி வழிபாடு செய்தால் குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும். வாராஹி அம்மனை "ஓம் வாராஹி தாயே நீயே துணை" என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் கஷ்டங்கள், எதிரி தொல்லை, கடன் தொல்லை, பணப்பிரச்னை உட்பட அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாகும் என அவர் தெரிவித்தார்.