சேந்தமங்கலத்தில் கருட பஞ்சமி விழா -திரளான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொண்ட ஆண்டாள் நாச்சியார் மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சேந்தமங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டு அந்த மாலையை கூடையில் வைத்து தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
கருட பஞ்சமி விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் 15 ஆம் ஆண்டு சிறப்பு பால் குடம் அபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கருட பஞ்சமி விழா குழு தலைவி ஜெயசித்ரா தலைமை தாங்கினார், இதில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர், இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சுவாமிகள் சூடிக்கொண்ட ஆண்டாள் நாச்சியார் மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சேந்தமங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கருட பஞ்சமி விழாவில் கலந்து கொண்டனர் பிறகு பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு சீர் தட்டோடு மற்றும் மங்களப் பொருட்களுடன் கருடாத்திரி பக்தர் குழு சேந்தமங்கலம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர் இதனை அடுத்து ஆண்டாள் நாச்சியார் மாலையை பெருமாளுக்கு அணிவித்து, பால்குடம் எடுத்து வந்தவர்கள் பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட பெண்களுக்கு தாலி பாக்கியம் கிடைக்கவும், ஆயுள் நீடிக்கவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் கோவில் உட் பிராகாரத்தில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சேந்தமங்கலம் ஸ்ரீகருடாத்ரி பக்த குழுவினர் செய்து இருந்தனர்.