சிறை கைதிகள் இடையே மோதல் சிறை துறை டிஐஜி விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணயில் அமைந்துள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் இரண்டு பேரிடையே சிறையில் படுத்து உறங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு சிறை கைதிகள் இடையே மோதல் சிறை துறை டிஐஜி விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் அமைந்துள்ளது தூத்துக்குடி மாவட்ட சிறை இந்த சிறையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள் 200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர் நான்கு பகுதிகளாக இந்தச் சிறை பிரிக்கப்பட்டு அங்கு விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விசாரணை கைதி சந்தனகுமார் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விசாரணை கைதி ஜெயச்சந்திரன் ஆகியோரிடையே சிறையில் படுத்து உறங்குவதில் இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்த தகராறில் இரு பிரிவாக கைதிகளிடையேமோதல் ஏற்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து சிறை காவலர்கள் உடனடியாக அங்கு வந்து இந்த மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர் இதில் ஒன்பது பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு சிறைக்குள்ளேயே சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து மாவட்ட சிறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தினர் மேலும் இந்த சிறைக்குள் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறுத்துறை டிஐஜி பழனி இன்று விசாரணை நடத்தினார் தூத்துக்குடி மாவட்ட சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது