ஒட்டன்சத்திரத்தில் வெங்காய பூக்கள்

ஒட்டன்சத்திரத்தில் வெங்காய பூக்கள்

Update: 2024-09-09 04:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காயம் இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. பழைய வெங்காயத்தை வாங்கி நடவு செய்வது ஒரு வகை. வெங்காய விதைகளை நடவு செய்து, நாற்றுகளை எடுத்து நடவு செய்து பயிர் செய்வது இரண்டாவது வகை. 2வது முறையில் வெங்காயம் பயிர் செய்தால் மகசூல் அதிகம் கிடைக்கும். தரமான வெங்காயம் கிடைக்கும். ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காய பூக்களிலிருந்து விதைகளை எடுத்து விற்பனையும் செய்கின்றனர். இதற்காக பல ஏக்கரில் வெங்காய விதைகளை பயிரிட்டுள்ளனர். தற்போது பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.

Similar News