வீரியம் பாளையத்தில் பலவண்ண குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
வீரியம் பாளையத்தில் பலவண்ண குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
வீரியம் பாளையத்தில் பலவண்ண குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, வீரியம் பாளையம் பகுதியில் தேவேந்திரன் நிறுவனத்தாரின் பல வண்ண குவாரி அமைப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குளித்தலை கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பு பொறியாளர் ஜெயக்குமார், மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்பகுதியில் அமைக்க உள்ள குவாரியினால் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கருத்து தெரிவித்தனர். அதே சமயம் சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் நிறைய குவாரிகள் செயல்பட்டு வருகிறது. புதிதாக இந்த குவாரி செயல்படுவதனால் மேலும் சுற்றுச்சூழல் மாசுபடும் எனவும், குவாரி அமைப்பதற்காக அரசு விதிமுறைப்படி இந்த குவாரி அமைக்க தகுதியான இடத்தில் இல்லை என்பதால், குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்தனர். இரு சாரார் கருத்துக்களையும் வீடியோவாக பதிவு செய்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.