காவிரி ஆற்றில் நான்காவது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு...

சங்ககிரி: கல்வடங்கம் காவிரி ஆற்றில் நான்காவது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு....

Update: 2024-09-10 15:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள, கல்வடங்கம் காவிரி ஆற்றில் நான்காவது நாளில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைக்கப்பட்டது நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையடுத்து சனிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைத்து வருகின்றனர். இதனையடுத்து நான்காவது நாளில் சேலம், வீரபாண்டி, தாரமங்கலம், எளம்பிள்ளை, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், அவரவர் ஊர்களில் வழிபட்ட விநாயகர் சிலைகளை மினி டெம்போ, வேன்களில் எடுத்து வந்து கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பூஜைகள் செய்த பின்னர் ஆற்றில் கரைத்து சென்றனர்.

Similar News